×

பாஜகவின் கொள்கைக்கு எதிராக போராடி வருகிறோம்: ராகுல் காந்தி பேட்டி

பெங்களூரு: பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகவே எதிர்க்கட்சிகளின் யுத்தம் தொடங்கி உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று 2வது நாளாக நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் வகையில் 26 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி; பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகவே எதிர்க்கட்சிகளின் யுத்தம் தொடங்கி உள்ளது.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது, விலைவாசி அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. தேசத்தை காக்க மோடிக்கு எதிரான செயல்திட்டத்தை உருவாக்கி வருகிறோம். பாஜகவுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றாக அணி திரண்டுள்ளோம். எங்கள் போராட்டம் நம் நாட்டை அச்சு சித்தாந்தத்திற்கு எதிரானது. இது பாஜகவுக்கும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான சண்டை அல்ல. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கான ‘I.N.D.I.A’ என்ற பெயர், இந்தியாவின் கருத்தைப் பாதுகாப்பதற்கான உறுதியைக் குறிக்கிறது.

இந்தியா என்ற கருத்தோட்டமே பாஜக ஆட்சியில் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டும் விதமாகவே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் நோக்கம் இந்தியாவை காக்க வேண்டும் என்பது தான். இந்த போராட்டம் 2 அரசியல் கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல, இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாக்கும் போராட்டம்.

இதுவரை வரலாற்றில், இந்தியாவின் கருத்தை யாராலும் எதிர்த்துப் போராட முடிந்ததில்லை என்பதை நாம் அறியலாம், இது இந்தியாவின் சித்தாந்தத்திற்கும் மோடிக்கும் இடையிலான யுத்தம். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டால் அனைத்தும் சரியாகிவிடும். இந்த கூட்டணி பாஜகவை வீழ்த்தும் வரை தொடரும் இவ்வாறு கூறினார்.

The post பாஜகவின் கொள்கைக்கு எதிராக போராடி வருகிறோம்: ராகுல் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bajaga ,Rahul Gandhi ,Bangalore ,Bajka ,Bajaka ,Dinakaran ,
× RELATED ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய...