×

அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை நடத்திய அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம்

சென்னை: அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை நடத்திய அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மனித உரிமை ஆர்வலர்கள் ஹென்றி திபேன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன், வழக்கறிஞர் அஜிதா, தராசு ஷியாம், பியூஷ் மனுஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 13 மணி நேர விசாரணைக்குப் பிறகு நள்ளிரவில் அழைத்துச் சென்றது ஏன்? என்றும் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு நள்ளிரவில் பொன்முடியை விசாரணைக்கு அழைத்துச் சென்றது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

72 வயதாகும் ஒரு மூத்த குடிமகனை நள்ளிரவில் அழைத்துச் சென்று விடிய விடிய விசாரித்தது கடுமையான மனித உரிமை மீறல் என கண்டனம் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறை விசாரணை நடந்தும் இடத்தில சிசிடிவி கேமரா ஏன் இல்லை என்றும் ஹென்றி திபோன் கேள்வி எழுப்பியுள்ளார். நள்ளிரவில் யாரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினாலும் அது மனித உரிமை மீறல்தான் என ஹென்றி திபோன் தெரிவித்துள்ளார். காலை முதல் மாலை வரை மட்டுமே ஒருவரை அழைத்துச் சென்று அமலாக்கத்துறை விசாரிக்க முடியும் என ஹென்றி திபோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல மணி நேரம் விசாரிக்கக் கூடாது எனவும் இடைவெளி விட வேண்டும் என்று நீதிமன்றங்கள் கூறி இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளனர். பொன்முடியை இத்தனை மணி நேரம் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரியன் கேள்வி எழுப்பியுள்ளார். அமலாக்கப்பிரிவு, என்.ஐ.ஏ போன்றவை தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக பாலச்சந்திரன் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

விசாரணை நடத்துவதற்கான விதிமுறைகளை தொடர்ந்து புறக்கணித்து அதற்கு விரோதமாக அமலாக்கப்பிரிவு செயல்படுவதாக பாலச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தனிநபர் தாக்குதலாக மட்டுமின்றி ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாக பார்க்க வேண்டும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். பாசிச அரசான பாஜக, அமைக்கப் பிரிவு மூலம் விசாரணை நடத்தும் செயல் கண்டனத்திற்குரியது என வழக்கறிஞர் அஜிதா தெரிவித்துள்ளார்.

The post அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை நடத்திய அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Minister ,Bonnadi ,Chennai ,Dinakaran ,
× RELATED ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை