×

பாஜக கூட்டத்தில் ஒரு எம்.பி. கூட இல்லாத 8 கட்சிகள் , ஒரே ஒரு எம்.பி. கொண்ட 9 கட்சிகள் பங்கேற்பு : திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கிண்டல்!!

டெல்லி: எதிர்க்கட்சிகள் பெங்களூரில் நடத்தும் கூட்டத்திற்கு போட்டியாக பாஜகவும் போட்டி கூட்டத்தை நடத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பாக 26 எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் இன்று கூட்டம் நடத்த உள்ள நிலையில், ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் போட்டி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடக்க உள்ளது. இதில் 38 கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, அகாலிதளம் போன்ற பாரம்பரிய கட்சிகளுடனான கூட்டணியை பாஜ இழந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் போன்ற பிளவுபட்ட கட்சிகளையும், உபியில் ராஜ்பார் தலைமையிலான எஸ்பிஎஸ்பி, ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, உபேந்திர குஷ்வாகா தலைமையிலான ஆர்எல்எஸ்பி போன்ற கட்சிகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. எனவே பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கும் கூட்டத்திற்கு பங்கேற்க வருமாறு இதுபோன்ற கூட்டணி கட்சிகளுக்கு பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் பாஜக கூட்டத்தை கிண்டல் அடித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், எதிர்க்கட்சிகள் பெங்களூரில் நடத்தும் கூட்டத்திற்கு போட்டியாக பாஜகவும் போட்டி கூட்டத்தை நடத்துவதாக விமர்சித்துள்ளார். பாஜக நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சிகளில் ஒரு எம்.பி கூட இல்லாத கட்சிகள் 8 என்றும் ஒரே ஒரு எம்பிக்கள் கொண்ட கட்சிகள் 9, 2 எம்பிக்களை கொண்ட கட்சிகள் 3 என அவர் கிண்டல் செய்துள்ளார்.

The post பாஜக கூட்டத்தில் ஒரு எம்.பி. கூட இல்லாத 8 கட்சிகள் , ஒரே ஒரு எம்.பி. கொண்ட 9 கட்சிகள் பங்கேற்பு : திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கிண்டல்!! appeared first on Dinakaran.

Tags : Bajaka meeting GP ,M. ,Trinamool Congress ,Delhi ,Bangalore ,Rajasthan ,Dérick ,Bajaka ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு...