×

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்…ஒரே தொகுதியில் தொடர்ந்து 12 முறை வென்று, 53 ஆண்டுகள் எம்எல்ஏ- வாக இருந்த ஒரே அரசியல் தலைவர்!!

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார். 79 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி, நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.ஒரே தொகுதியில் தொடர்ந்து 12 முறை வென்று, 53 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி ஆவார்.

1970 முதல் 2021 வரை காங்கிரஸ் கட்சி சார்பாக கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில், போட்டியிட்ட அனைத்து முறையும் வெற்றி வாகைசூடி வீழ்த்த முடியாதவராக தனது வாழ்க்கை, அரசியல் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்; கடந்த 2004-06 மற்றும் 2011-16 ஆகிய இருமுறை அம்மாநில முதலமைச்சராக பதவி விகித்தவர் மறைந்த உம்மன் சாண்டி. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்தியில்,”உம்மன் சாண்டி மிக சிறந்த நிர்வாகி, மக்களுடன் நெருங்கி வாழ்ந்தவர்.

நாங்கள் இருவரும் ஒரே ஆண்டில் தான் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டோம். மாணவர் பருவத்தில் இருந்து அரசியலுக்கும் இருவரும் ஒன்றாக தான் அடியெடுத்து வைத்தோம்,’என்றார். முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவை தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கேரள மாநில அரசு இன்று ஒருநாள் பொது விடுமுறை அறிவித்தது.

The post கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்…ஒரே தொகுதியில் தொடர்ந்து 12 முறை வென்று, 53 ஆண்டுகள் எம்எல்ஏ- வாக இருந்த ஒரே அரசியல் தலைவர்!! appeared first on Dinakaran.

Tags : Former ,Kerala ,Chief Minister ,Umman Sandy ,MLA ,Thiruvananthapuram ,Chief Minister of Kerala ,
× RELATED சொல்லிட்டாங்க…