×

மக்கள் குறைதீர்வு கூட்டம் 374 பேர் மனு அளித்தனர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்

திருவண்ணாமலை, ஜூலை 18: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கோரிக்கை மனுக்களை டிஆர்ஓ பிரியதர்ஷினி பெற்றுக்கொண்டார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ பிரியதர்ஷினி தலைமையில் நேற்று நடந்தது. அதில், ஆர்டிஓ மந்தாகினி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 374 மனுக்கள் பெறப்பட்டது. பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு டிஆர்ஓ உத்தரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆய்வு நடத்தினார்.

The post மக்கள் குறைதீர்வு கூட்டம் 374 பேர் மனு அளித்தனர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Meeting ,Thiruvannamalai Collector ,Thiruvannamalai ,TRO ,Priyadarshini ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...