×

திண்டுக்கல்லில் இலவச சேமிப்பு உண்டியல் வழங்கல்

திண்டுக்கல், ஜூலை 18: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், இலக்கியக்களம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா 2023 வரும் அக்.5ம் தேதி முதல் அக்.15ம் தேதி வரை திண்டுக்கல் ட்டலி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. புத்தக திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் தாங்களே சேமித்து புத்தகங்களை வாங்கி பயன்பெற ஏதுவாக இலவச சேமிப்பு உண்டியல் வழங்கும் திட்டம் நேற்று திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, எம்எஸ்பி சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி

மாணவர்களுக்கு ஆர்டிஓ கமலக்கண்ணன் உண்டியல்கள் வழங்கி பேசியதாவது, ‘மாணவர்கள் தேவையற்ற செலவுகளை குறைத்து கொண்டு சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிகப்படியான தொகையை சேமித்து புத்தகங்கள் வாங்கி பயன்பெற வேண்டு’ என்றார். இந்நிகழ்ச்சியில் இலக்கியக் கள நிர்வாக செயலாளர் கண்ணன், தலைவர் மனோகரன், துணை தலைவர் சரவணன், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, பள்ளி ஆசிரியர் சாமி பாலசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் இலவச சேமிப்பு உண்டியல் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Thindikulle ,Dintugul ,Book Festival ,District Administration of Dintugul and the Literature ,Dindigul ,Dinakaran ,
× RELATED ஸ்வைப்பிங் இயந்திரம் வழங்கல் 20வது புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம்