×

மாக்கினாங்கோம்பை ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொது மருத்துவ முகாம்

 

சத்தியமங்கலம், ஜூலை 17: சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாக்கினாங்கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்னோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.சி.பி. இளங்கோ குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். வட்டார மருத்துவ அலுவலர், பிரபாவதி தலைமையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பொது மக்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.

இம்முகாமில் மாக்கினாங்கோம்பை ஊராட்சி தலைவர் ஈஸ்வரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் செவிலியர்கள், இண்டியம்பாளையம் ஊராட்சி தலைவர் செந்தில், ஊராட்சி மன்ற துணை தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றியக்குழு கவுன்சிலர் ராஜம்மாள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன், மாணவர் அணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

The post மாக்கினாங்கோம்பை ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொது மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary General Medical Camp ,Makinangombe Parish ,Sathyamangalam ,Makinangombi Panchayat Union Middle School ,Sathyamangalam Panchayat Union ,Makinangombi Panchayat ,Dinakaran ,
× RELATED தமிழக- கர்நாடக மலைப்பாதையில் சாலையில்...