×

மாடியில் இருந்து விழுந்தவர் பலி

 

கோவை, ஜூலை 18: சேலம் மாவட்டம் சங்ககிரி அக்கம்மாபேட்டையை சேர்ந்தவர் நல்லமுத்து மகன் வெங்கடேஷ்குமார் (29). இவர், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் அறை எடுத்து தங்கி மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக வெங்கடேஷ்குமார் முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது வெங்கடேஷ்குமார் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மாடியில் இருந்து விழுந்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Nallamuthu ,Venkatesh Kumar ,Sangakiri Akammapet, Salem district ,Dinakaran ,
× RELATED கோவை காரமடையில் கடும் பனிப்பொழிவு: ஜாதி முல்லை பூச்செடிகள் கருகின