×

முப்பெரும் விழாவில் மாணவர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம், ஜூலை 18: திருப்புல்லாணி அருகே மேதலோடையில் காமராஜர் அறக்கட்டளையின் ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழா, காமராஜரின் பிறந்தநாள் விழா, மாணவ, மாணவியருக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு நாடார் மகாஜன சங்க அறக்கட்டளையின் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். மகளிர் அணி நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றினர்.

விழாவில் கிழக்கு ராமநாதபுரம் நாடார் உறவின்முறை தலைவர் பழனிச்சாமி, நாடார் மகாஜன சங்க பள்ளிகளின் முன்னாள் செயலாளர் மோகன், மாவட்ட செயலாளர் குகன் 84 கிராம நாடார் உறவின்முறை சங்க நிறுவனத் தலைவர் தங்கராஜ், தலைவர் நாகு மற்றும் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் தேர்வு செய்யப்பட்ட மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு சான்று, கேடயம், வழங்கப்பட்டது.

The post முப்பெரும் விழாவில் மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Thirty Festival ,Ramanathapuram ,Kamarajar Foundation ,Medaloda ,Tiruppullani ,Kamarajar ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே...