×

திருப்புத்தூர் அருகே விபத்தில் வாட்ச்மேன் பலி

திருப்புத்தூர், ஜூலை 18: திருப்புத்தூர் அருகே நேற்று வாகன மோதியதில் டூவீலரில் சென்ற வாட்ச்மேன் சம்பவ இடத்திலே பலியானார். திருப்புத்தூர் அருகே மணமேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி(69). இவர் மானகிரியில் உள்ள கண் மருத்துவமனையில் வாட்ச்மேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலையில் மணமேல்பட்டியில் இருந்து மானகிரிக்கு டூவீலரில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது குமங்குடி அடுத்து குன்று கண்மாய் அருகே பைபாஸ் பாலம் பகுதியில் இவருக்கு பின்னே வந்த வாகனம் ஒன்று இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த ராமசாமி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post திருப்புத்தூர் அருகே விபத்தில் வாட்ச்மேன் பலி appeared first on Dinakaran.

Tags : Watchman ,Tiruputhur ,Dinakaran ,
× RELATED கஞ்சா கடத்திய வாலிபர் கைது