×

விஐடி பல்கலைக் கழகத்தில் பிரெஷர்ஸ் ஓரியண்டேஷன் திட்ட துவக்க விழா

திருப்போரூர்: சென்னை விஐடி பல்கலையில் பிரெஷர்ஸ் ஓரியண்டேஷன் திட்ட துவக்க விழா நடந்தது. விஐடியின் நிறுவனரும் வேந்தருமான முனைவர் கோ.விசுவநாதன் மற்றும் துணைத்தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி விஐடி சென்னையில் இரண்டு ஆண்டு முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மற்றும் சட்டம், மேலாண்மை, வணிகம் போன்ற பொறியியல் அல்லாத இளங்கலை படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒருமாத கால பிரெஷர்ஸ் ஓரியண்டேஷன் திட்டம்-2023ன் துவக்க விழா நேற்று நடந்தது.

இவ்விழாவில், விஐடி சென்னையின் இணை துணை வேந்தர் முனைவர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் பேசுகையில், “கல்வியானது பல்துறை சார்ந்தது. மாணவர்கள் விஐடி சென்னை வளாகத்தில் உள்ள அதிநவீன வசதிகளைப் பயன்படுத்தி எதிர்காலத்திற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ப்லோசில் குழும நிறுவனங்களின் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான அஸ்வின் ரத்தோட் கலந்து கொண்டு தனது உரையில், ‘மாணவர்கள் தீர்க்கும் ஒவ்வொரு சமன்பாடும், அவர்கள் செய்யும் ஒவ்வொரு திட்டமும் உலகை மாற்றும். மாணவர்கள் தங்களின் திறன்களின் மீது நம்பிக்கை வைத்து செயலாற்ற வேண்டும்.

மேலும், அவர்களுக்கு வருகின்ற தோல்விகளை கண்டு அஞ்சாமல் அதனை கிடைக்கும் வாய்ப்பாகக் கருத வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இத்துவக்க விழாவின் கௌரவ விருந்தினர் மற்றும் விஐடியின் முன்னாள் மாணவருமான அர்ஜுன் முரளி, மேலாளர், முடிவு அறிவியல், கடன் மோசடி பகுப்பாய்வு துறை, இந்தியா நிறுவன பேபல் கலந்து கொண்டு உரையாற்றுகையில், ‘வெற்றி அடைவதற்கு பின்பற்ற வேண்டிய நுட்பங்கள் மற்றும் சாத்தியக் கூறுகளை பட்டியலிட்டார். வெற்றி என்பது உங்களின் திறமைக்கு நேர்மறையான செயல் என்று கருதப்படும்’ என்றார்.

இவ்விழாவில் கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன், பேராசிரியர் மற்றும் டீன்-கல்வியாளர் முனைவர் நயீமுல்லாஹ் கான்.கி, விஐடி சென்னையின் முனைவர் ராஜசேகரன், இயக்குநர், மாணவர் நலன் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விஐடி சென்னையில் சட்டம் மற்றும் வணிகம் போன்ற பொறியியல் அல்லாத இளங்கலைப் படிப்புகள் மற்றும் இரண்டு ஆண்டு முதுநிலைப் படிப்புகளைச் சேர்த்து மொத்தம் 961 முதலாமாண்டு மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது. விஐடி சென்னையின் வணிகத் துறையின் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் ஹரி கிருஷ்ணன் நன்றியுரையுடன் முதலாமாண்டு தொடக்க விழா வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

The post விஐடி பல்கலைக் கழகத்தில் பிரெஷர்ஸ் ஓரியண்டேஷன் திட்ட துவக்க விழா appeared first on Dinakaran.

Tags : Orientation ,VIT University ,Tirupporur ,Chennai ,VIT ,Dr. ,Go Viswanathan ,Dinakaran ,
× RELATED தினகரன் நாளிதழ்- விஐடி பல்கலைக்கழகம்...