×

ஆடி அமாவாசையையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் ஏராளமானோர் புனித நீராடல்

 

திருவாரூர், ஜூலை 18: ஆடி அமாவாசையையொட்டி திருவாரூரில் உள்ள கமலாலய குளத்தில் நேற்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
ஆண்டுதோறும் ஆடி மாதம் மற்றும் தை மாதங்களில் வரும் அம்மாவாசை தினத்தில் பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அவ்வாறு திதி கொடுப்பதால் முன்னோர்கள் தங்களது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்பர் என்பது ஐதிகமாகும்.

அதன்படி நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலின் கமலாலயம் குளத்திலும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுமட்டுமின்றி ராமர் பாதம்பட்ட இடமான கேக்கரை மற்றும் திருப்பள்ளி முக்கூடல் உட்பட பல்வேறு இடங்களிலும் பொது மக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

The post ஆடி அமாவாசையையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் ஏராளமானோர் புனித நீராடல் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur Kamalalaya Pond ,Aadi Amavasai ,Tiruvarur ,Kamalalaya Pond ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...