×

தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை கவர்னர் மாளிகை பொலிவு பெறுமா?

 

தரங்கம்பாடி, ஜூலை 18: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அழகுபடுத்த தமிழக அரசு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ்கோட்டை, கடற்கரை, கவர்னர் மாளிகை, சுற்றுலா துறைக்கு சொந்தமான தங்கும் விடுதி, படகு இல்லம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து சுற்றுலா அதிகாரிகள் ஆய்வு நடத்தி சென்றுள்ளனர். ரூ. 3 கோடி நிதியில் என்ன பணி நடைபெற போகிறது என்று அறிவிக்கப்படாத நிலை உள்ளது. தரங்கம்பாடியில் கவர்னர் மாளிகை ஒன்று உள்ளது. இதில் மிக உயரமான தூண்களும் தாழ்வார மையத்தில் பெரிய முற்றமும் அதன் இருபுறமும் பெரிய கூடங்களும் அமைக்கபட்டுள்ளது.

இதில் 1770 முதல் 1785 வரை டேனிஷ் ஆளுநர்கள் தங்கும் இடமாக இருந்தது. 1845ல் ஆங்கியேர் வசம் இக்கட்டிடம் சென்றது. 1884ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றமும் இயங்கி வந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1947ல் இக்கட்டிடத்தில் உப்பு அலுவலகம் செயல்பட்டது. இப்பொழுது கவர்னர் மாளிகை கட்டிடம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 3 கோடி வளர்ச்சி நிதியில் கவர்னர் மாளிகையில் ஆக்கபூர்வமான பணி செய்து சுற்றுலா பயணிகளுக்கு பயன்தரும் வகையில் அமைந்திட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை கவர்னர் மாளிகை பொலிவு பெறுமா? appeared first on Dinakaran.

Tags : tharangambadi ,Tamil Nadu Government ,Dangambadi ,Governor House ,Dinakaran ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...