×

ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசு பள்ளி-சுற்றுச்சுவர் கட்டித்தர கோரிக்கை

ஆலங்காயம்: ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டில் உள்ள அரசு பள்ளி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதை தடுக்க சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்புறத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக பள்ளி மூடப்பட்டிருந்தது. இதனால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக பள்ளி மாறியுள்ளது. இரவு முழுவதும் பள்ளி வளாகத்தின் உள்ளேயே மது அருந்துவது மற்றும் கஞ்சாவை போதை ஆசாமிகள் பயன்படுத்தி வருகின்றனர். மது பாட்டில்களை பள்ளி வளாகத்திலேயே உடைத்து விட்டு செல்கின்றனர். கடந்த 5 வருடங்களாக இதே நிலை தொடர்ந்து நீடித்து வருவதாக ெபாதுமக்கள் தெரிவித்துள்ளனர். சமூக விரோதிகளின் அட்டூழியத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது சுற்றுச்சுவர் இல்லாததும், இரவு வாட்ச்மேன் இல்லாததும் என்று கூறப்படுகிறது. மேலும், பள்ளிக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். இரவு வாட்ச்மேனையும் பணியமர்த்த வேண்டும். அதுமட்டுமின்றி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசு பள்ளி-சுற்றுச்சுவர் கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Alangayam ,Nimmiyambat ,Alankayam ,Nimmiyampat ,
× RELATED வாணியம்பாடி அருகே ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளை