×

காதலர்கள் வீடியோ எடுத்த விவகாரம் கேதர்நாத் கோயிலில் பக்தர்கள் புகைப்படம் எடுக்க தடை

டேராடூன்: கேதர்நாத் கோயிலில் புகைப்படம் எடுக்கவும்,வீடியோக்கள் எடுக்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், கேதர்நாத் கோயில் வளாகத்தில், சமீபத்தில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு பரிசு கொடுத்து ப்ரபோஸ் செய்து அணைத்து மகிழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பக்தர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் கோயிலின் புனிதம் மற்றும் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கருத்து எழுந்தது.

இந்நிலையில் கேதர்நாத் கோயிலில் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், வீடியோ எடுப்பதற்கும் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. பத்ரிநாத் கேதர்நாத் கோயில் கமிட்டி சார்பாக கோயில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் செல்போனுடன் கோயில் வளாகத்திற்குள் நுழையாதீர்கள், புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. விதிகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் ஏன குறிப்பிடப்பட்டுள்ளது.

The post காதலர்கள் வீடியோ எடுத்த விவகாரம் கேதர்நாத் கோயிலில் பக்தர்கள் புகைப்படம் எடுக்க தடை appeared first on Dinakaran.

Tags : Kedarnath ,Dehradun ,Kedarnath temple ,Uttarakhand ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...