×

சந்திரயான்-3 இயக்குனர் கருத்து எதிர்பார்ப்பின்றி முயற்சித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்

சென்னை: ஒழுக்கம், விடாமுயற்சி, எதிர்பார்ப்பு இன்றி தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என சந்திரயான்-3 விண்கல திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்குனர் வீரமுத்துவேல் இணையத்தளத்தில் கலந்துரையாடியது: நான் விழுப்புரம் ரயில்வே பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளி பருவத்தில் சாதாரண மாணவனாக இருந்தேன். பள்ளி முடிந்த பிறகு அடுத்து என்ன படிக்கவேண்டுமென எந்த ஒரு யோசனையும் இல்லை. முதுநிலைப் பட்டம் திருச்சியில் உள்ள ஆர்.இ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் பயின்றேன். படித்து முடித்த பின் விண்வெளி ஆராய்ச்சியில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது அதன் விளைவாக பெங்களூரில் உள்ள ஹெலிகாப்டர் வரைகலை பிரிவில் பொறியாளராக பணியாற்ற தொடங்கினேன்.

சிறது காலத்திற்கு பிறகு இஸ்ரோவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அங்கு பல விண்கலத்திற்கு திட்ட பொறியாளராகவும், திட்ட மேலாளராகவும் பணியாற்றினேன். பணியாற்றும் போதே ஐஐடி மெட்ராஸில் பிஎச்டியை முடித்தேன். இஸ்ரோவின் முதல் நானோ செயற்கைக்கோள் குழுவிற்கு வழிகாட்டியாக இருந்தேன். 3 நானோ செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. தற்போது சந்திரயான்-3 திட்ட இயக்குனராக பெரிய குழுவை வழிநடத்தியுள்ளேன். நான் ஒரு எளிய மனிதன். என்னால் இந்த அளவிற்கு வர முடியும் என்றால் அனைவராலும் முடியும். வாய்ப்புகள் அனைவருக்கும் உள்ளது, அதனை எவ்வாறு பயன்படுத்திகொள்கிறோம் என்பது நம் கையில் உள்ளது. ஒழுக்கம், விடாமுயற்சி, எதிப்பார்ப்பு இன்றி தொடந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.

The post சந்திரயான்-3 இயக்குனர் கருத்து எதிர்பார்ப்பின்றி முயற்சித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Veeramuthuvel ,Chandrayan- ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்