×

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் இருந்து திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு வஸ்திர மரியாதை: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

சென்னை: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து வஸ்திரங்கள், குடைகள், மலர் வகைகள், பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் ஆந்திர மாநிலம், திருப்பதி வெங்கடசலபதி கோயிலுக்கு வழங்கி வஸ்திர மரியாதை செய்யப்
பட்டது. முகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது, அவர்களிடம் நம்பெருமான் விக்ரகங்கள் சிக்காமல் இருப்பதற்காக, திருப்பதி மலையில் வைத்து சுமார் 50 ஆண்டுகள் விக்ரகங்கள் பாதுகாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ரங்கம், அரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து ஆடி மாதம் 1ம் தேதி ஆந்திர மாநிலம், திருப்பதி, வெங்கடசலபதி கோயிலுக்கு வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று ரங்கம், அரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரங்கள், குடைகள், மலர் வகைகள், பழங்கள், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் ஆந்திர மாநிலம், திருப்பதி வெங்கடசலபதி கோயிலுக்கு வழங்கி வஸ்திர மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்றார். மேலும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கோயில் இணை ஆணையர் எஸ்.சிவராம்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் இருந்து திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு வஸ்திர மரியாதை: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Vestri ,Srirangam ,Aranganatha Swamy Temple ,Tirupati Venkatachalapati Temple ,Minister ,Shekharbabu ,Chennai ,Srirangam Aranganatha Swamy Temple ,Andhra State ,Minister Shekhar Babu ,
× RELATED ஸ்ரீவில்லி. ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது