×

வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு மையத்தால் நாட்டு முயல் வேட்டை தடுப்பு: அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வன உயிரினக் குற்றக் கட்டுப்பாட்டு மையத்தின் புலனாய்வுக் குழுவினர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் பெருமளவில் சட்டவிரோதமாக நாட்டு முயல்களை வேட்டையாட நடந்த முயற்சியை தடுத்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு வன உயிரினக் குற்றக் கட்டுப்பாட்டு மையம், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு வனச்சரக அலுவலர்கள், வனக் காவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. வேட்டையாடும் கும்பலுக்குள் ஒரு ரகசிய தகவல் கொடுப்பவரை வைத்து, இந்த நடவடிக்கையை முடக்க முடிவு செய்யப்பட்டது.

அவர் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெருந்துறை அருகே 200க்கும் மேற்பட்ட கும்பல் நாட்டு முயல்களை வேட்டையாட திட்டமிடுவது தெரிய வந்தது. அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, 63 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் இணக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு வனத்துறையின் இந்த குற்ற தடுப்புச் சம்பவம் அப்பகுதியிலுள்ள மற்ற கிராமங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வனவிலங்கு பாதுகாப்புக்கு உதவியாக அமைந்தது.

The post வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு மையத்தால் நாட்டு முயல் வேட்டை தடுப்பு: அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Wildlife Crime Center ,Chennai ,Tamil Nadu Government ,Tamil Nadu Wildlife Crime Control Centre ,Erode district ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...