×

ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 16ம் தேதி நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஜூன் 28ம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியை கொடுத்தது.

ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரின் வெற்றி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற கட்டாயத்திற்கு இங்கிலாந்து அணி தள்ளப்பட்டது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் நீடித்தது.

இதையடுத்து நாளை மறுநாள் தொடங்க உள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இதில் மூன்றாவது போட்டியில் இடம்பெறாத மூத்த வீரரான ஆண்டர்சன் அணியில் இடம் பெற்றுள்ளார்.

மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் எதாவது ஒரு போட்டியில் வென்றால் கூட ஆஷஸ் தொடரை கைப்பற்றிவிடும். இதனால் மீதமுள்ள போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : England ,Ashes ,London ,Australia ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை