×

ஸ்கோடா குஷக்

ஸ்கோடா குஷக் காரின் மேட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கார்பன் ஸ்டீல் பெயிண்ட்டை ஒரு மேட் பினிஷில் கொடுக்கப்பட்டுளளது. ஓஆர்வியும், கதவின் கைப்பிடிகள், பின்புற ஸ்பாய்லர் ஆகியவை கார்பன் ஸ்டீல் மேட் தோற்றத்திற்கு எதிரான க்ளாஸி பிளாக் வண்ணத்தில் மெருகேற்றப்பட்டுள்ளன. இருப்பினும், கிரில், ட்ரங்க் கார்னிஷ் போன்ற சில பகுதிகள் தனித்து நிற்கும் வகையில் எப்போதும் போலவே குரோமில் இடம்பெற்றுள்ளன. மான்டே கார்லோ-வைப் போலவே, இந்த குஷாக் மேட் பதிப்பும், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் கொண்டது.

6 உயர் செயல்திறன் கொண்ட ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு சப்ஊபர் மூலம் இயக்கப்படும் ஸ்கோடா சவுண்ட் சிஸ்டம் இதில் இடம் பெற்றுள்ளது. ஸ்பெஷன் எடிஷனாக 500 கார்கள் மட்டுமே மேட் வண்ணத்தில் சந்தைப்படுத்தப்படும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது. குஷக் மேட் எடிஷன் 1.0 லிட்டர் இன்ஜின் கொண்டது துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.16.19 லட்சம் எனவும், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் கொண்டது சுமார் ₹18.19 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post ஸ்கோடா குஷக் appeared first on Dinakaran.

Tags : Skoda Kushak ,Dinakaran ,
× RELATED தீமைகளை நீக்கி நல்வாழ்வு அருளும் தெய்வீக தலமரங்கள்