×

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பெங்களூருவுக்கு வந்தார் சோனியா காந்தி, ராகுல்காந்தி; பூங்கொத்து கொடுத்து வரவேற்பு..!!

பெங்களூரு: எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சோனியா காந்தி பெங்களூருவுக்கு வந்தடைந்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த மாதம் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் 6 மாநில முதல்வர்கள் உள்பட 17 எதிர்கட்சிகள் பங்கேற்றன. இதனைத்தொடர்ந்து 2வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 24 தலைவர்கள் பங்கேற்கின்றனர். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்றுள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சோனியா காந்தியும் பெங்களூருவுக்கு வந்தடைந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனகார்கே, ராகுல் காந்தி ஆகியோரும் பெங்களூரு வந்துள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தில் சோனியா, ராகுல், கார்கேவுக்கு சித்தராமையா, சிவகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விசிக தலைவர் திருமாவளவன், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வருகை புரிகின்றனர். எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இன்று மாலை சோனியா காந்தி தேநீர் விருந்து அளிக்க உள்ளார். அதனைத்தொடர்ந்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

The post எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பெங்களூருவுக்கு வந்தார் சோனியா காந்தி, ராகுல்காந்தி; பூங்கொத்து கொடுத்து வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Bangalore ,Rakulkandi ,Bajaka ,2024 Parliamentary Election ,Raakulkandi ,Dinakaran ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...