×

திருவொற்றியூர் விம்கோ நகரில் மெட்ரோ ரயில் இன்ஜின் திடீர் கோளாறு 5மணி நேரம் நடுவழியில் பயணிகள் தவிப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் இன்ஜின் பழுதானதால் சுமார் ஐந்து மணி நேரம் பயணிகள் தவித்தனர். சென்னை திருவொற்றியூர், விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை விம்கோ நகர் பணிமனை, கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் மட்டுமின்றி, எர்ணாவூர், எண்ணூர், மணலி போன்ற பகுதியில் இருந்து அலுவலர்கள், தொழிலாளர்கள் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் என ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை 5 மணிக்கு விம்கோ நகர் பணிமனையில் இருந்து மெட்ரோ ரயில் புறப்பட்டபோது இயந்திர கோளாறு காரணமாக விம்கோநகர் பணிமனையில் இருந்து செல்லக்கூடிய மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு, தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்கின்றவர்கள் கடும் அவதிப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு எப்போது சரியாகும் என்று நிர்வாகம் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்காததால் பயணிகள் தவித்தனர்.

இதனால் பயணிகள் அங்கிருந்து வேறொரு வாகனம் மூலமாகவும் நடந்தும் அடுத்த நிறுத்தமான விம்கோ நிறுத்தத்திற்கு சென்றனர். இதனிடையே இன்றுகாலை 9 மணிக்கு இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு சுமார் ஐந்து மணி நேரத்திற்கு பின் விம்கோ நகர் பணிமனையில் இருந்து மீண்டும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. இதன்பிறகு போக்குவரத்து சீராகி பயணிகள் சென்றுவந்தனர்.

The post திருவொற்றியூர் விம்கோ நகரில் மெட்ரோ ரயில் இன்ஜின் திடீர் கோளாறு 5மணி நேரம் நடுவழியில் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur Vimco ,Tiruvottiyur ,Tiruvottiyur Vimco Nagar ,station ,
× RELATED எண்ணூர் மயானத்தில் மின்விளக்கு...