×

ஜோகோவிச்சை எதிர்த்து ஆடியது அற்புதமான தருணம்; தோற்றாலும் கூட பெருமைப்பட்டிருப்பேன்: விம்பிள்டன் சாம்பியன் அல்காரஸ் பேட்டி

லண்டன்:கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பைனலில் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் 20 வயதான கார்லோஸ் அல்காரஸ், 2ம் நிலை வீரரான செர்பியாவின் 36 வயது ஜோகோவிச் மோதினர். விறுவிறுப்புடன் 5 செட் வரை நடந்த இந்த போட்டியில் அல்காரஸ், 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில், 7 முறை விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

4 மணி நேரம் 45 நிமிடம் நடந்த போட்டியில் வென்ற அல்காரசுக்கு இது முதல் விம்பிள்டன் மற்றும் 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு அவர் யுஎஸ் ஓபன் பட்டம் வென்றிருந்தார். அல்காரசுக்கு சுமார் ரூ.25.25 கோடி பரிசு வழங்கப்பட்டது. ஜோகோவிச் 12.65 கோடி வென்றார். வெற்றிக்கு பின் அல்காரஸ் பேசுகையில், இது எனக்கு ஒரு கனவு நனவான நாளாகும். நான் தோற்றாலும் கூட, இந்த அற்புதமான ஆட்டம் மூலம் என்னைப் பற்றி நான் பெருமைப்படுவேன். ஜோகோவிச்சை எதிர்த்து ஆடியது அற்புதமான தருணம்.

அவரைப் பார்த்து தான் டென்னிஸ் விளையாட தொடங்கினேன். நான் பிறந்த காலகட்டத்திலேயே பல பட்டங்களை அவர் வென்றுள்ளார். அவரை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. 36 வயதான அவர் 26 வயது வீரர் போல் ஆடினார். என தெரிவித்தார்.ஜோகோவிச் கூறுகையில், சிறந்த வீரரிடம்தான் தோல்வி அடைந்துள்ளேன். அருமையாக ஆடி வெற்றி பெற்ற அல்காரஸுக்கு வாழ்த்துக்கள். நான் தோல்வி அடைய வேண்டிய பல சாம்பியன் பட்டங்களை வென்று இருக்கிறேன். ஆனால் இன்று வெற்றிபெற வேண்டிய போட்டியில் தோற்றுவிட்டேன். இதனால் இரண்டும் சமம் ஆகிவிட்டது’’ என்றார்.

The post ஜோகோவிச்சை எதிர்த்து ஆடியது அற்புதமான தருணம்; தோற்றாலும் கூட பெருமைப்பட்டிருப்பேன்: விம்பிள்டன் சாம்பியன் அல்காரஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Djokovich ,Wimbledon ,Algarus ,London ,Wimbledon Tennis ,Adeavar ,
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் சாம்பியன்: 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம்