×

காரைக்கால் அம்மையார் கோயிலில் பரமதத்தருக்கு மாம்பழம் வைத்து வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்

காரைக்கால்: காரைக்காலில் கைலாசநாதர் கோயில் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் காரைக்கால் அம்மையார் கோயில் உள்ளது. ஈசனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர், ஒரே பெண் நாயன்மார் என்ற சிறப்புகளை பெற்றவர் காரைக்கால் அம்மையார். பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் கடந்த 30ம் தேதி துவங்கியது. கடந்த 1ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதைதொடர்ந்து தேரோட்டம், மாங்கனி இறைத்தல் திருவிழா 2ம் தேதி கோலாகலமாக நடந்தது.

இந்த விழாவில் ஒரு நிகழ்வாக பரமதத்தருக்கு, காரைக்கால் அம்மையார் மாம்பழம் வைத்து உணவளிக்கும் நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காரைக்கால் அம்மையார், பரமதத்த செட்டியாருக்கு மாம்பழம் வைத்து உணவளிக்கும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

The post காரைக்கால் அம்மையார் கோயிலில் பரமதத்தருக்கு மாம்பழம் வைத்து வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Karaikal Ammaiyar ,temple ,Lord Buddha ,Karaikal ,Karaikal Ammaiyar Temple ,Kailasanathar Temple ,Ammaiye ,Esan ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்