×

கோத்தகிரி – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தது: சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி: கோத்தகிரி – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை குஞ்சப்பனை பகுதியில் மரம் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குஞ்சப்பனை பகுதியில் காலை நேரத்தில் சாலையோர வனப்பகுதியில் இருந்து ராட்சத மலை நெடுஞ்சாலையில் விழுந்ததால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் விழுந்த மரம் குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டிய உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மீது விழுந்ததால் உடனே அருகில் இருந்த மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பின்னர், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் கோத்தகிரி – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பானது ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்ல வேண்டிய பேருந்து, சரக்கு வாகனம், இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் ஊழியர்கள் வர தாமதம் ஏற்படும் என்பதால் அருகில் உள்ள கிராம மக்களே தற்காலிகமாக சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்து சீர் செய்துள்ளனர்.

The post கோத்தகிரி – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தது: சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Gothagiri ,Mattupalayam highway ,Nilagiri ,Kunchappanam ,Madtupalayam highway ,Nilgiri District ,Kotakiri ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் மழை குறைந்ததால் மைக்ரோ...