×

நீராவி என்ஜின் வடிவில் சொகுசு சுற்றுலா மின்சார ரயில் : சென்னை-புதுச்சேரி இடையே சோதனை ஓட்டம்

புதுச்சேரி : சென்னை – புதுச்சேரி இடையில் நீராவி ரயில் எஞ்சின் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள சொகுசு சுற்றுலா மின்சார ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட இந்த ரயிலில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பயணம் செய்தனர்.

நீராவி புகை வெளியேற்றியவாறு ஹாரன் ஒலித்தபடியும் சொகுசு ரயில் சென்றது. இந்த சுற்றுலா ரயிலில் 3 சொகுசு ஏ.சி.பெட்டிகள் ஒரு பாண்ட்ரி ஏ.சி.பெட்டி, சொகுசு இருக்கைகள், சுற்றுலா இடங்களை காணும் வகையில் கண்ணாடி மேற்கூரை ஆகியவை உள்ளன. அதிநவீன கழிப்பிட வசதி, பெரிய ஜன்னல்கள், மொபைல் போன் சார்ஜிங் வசதி, அவசர கால கதவுகள், வண்ண நிறங்களில் உள் அலங்காரம், அடுத்த நிறுத்தம் மற்றும் ரயிலின் வேகம் உள்ளிட்ட தகவல்கள் அளிக்க டிஜிட்டல் திரைகள், ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லும் வசதி ஆகியவை இந்த சொகுசு ரயிலில் இடம்பெற்றுள்ளன.

மதியம் 12.30 மணிக்கு புதுச்சேரி ரயில் நிலையத்தை சென்று அடைந்த அந்த ரயிலில் இருந்து இறங்கிய தெற்கு ரயில்வே மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை பூங்கொத்து கொடுத்து ரயில்வே ஊழியர்கள் வரவேற்றனர்.

The post நீராவி என்ஜின் வடிவில் சொகுசு சுற்றுலா மின்சார ரயில் : சென்னை-புதுச்சேரி இடையே சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai-Puducherry ,Puducherry ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை