×

பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: திமுக

சென்னை: பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்தெரிவித்துள்ளார். திமுக மீது பா. .ஜ.க.வுக்கு கோபம், வெறுப்பு இருக்கிறது. பா.ஜ.க. எதிர்ப்பு நடவடிக்கையை திமுக குறைத்துக்கொள்ள அச்சுறுத்தும் நடவடிக்கையாக சோதனை நடைபெறுகிறது. 2 வழக்குகளில் பொன்முடி குற்றமற்றவர் என்று வெளியே வந்த நிலையில் சோதனை நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளை வேண்டுமென்றே பயமுறுத்துவதற்காகவே அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது ஒன்றிய அரசு. பா.ஜ.க.வுக்கு எதிரான கொள்கை ரீதியான யுத்தத்தை திமுக இன்னும் வீரியத்துடன் மேற்கொள்ளும். குஜராத்தில் 4 பாலங்கள் இடிந்துள்ளன, அங்கு உள்ள ஊழல்களை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தைரியம் இல்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வேகத்தை குறைப்பதற்காக அமலாக்கத்துறையை பா.ஜ.க. பயன்படுத்துகிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கில் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர் எனவும் கூறினார்.

The post பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: திமுக appeared first on Dinakaran.

Tags : Ponmudi ,DISGAGA ,Chennai ,Dizhagam ,Constantine Rawindrandhandeh ,Kazhagam ,
× RELATED சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி ஜாமீன் பெற கூடுதல் அவகாசம்..!!