×

ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ: 4,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு

மாட்ரிட்: ஸ்பெயினில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவுவதால் அதனை அணைக்க வீரர்கள் திணறி வருகின்றனர். லா பால்மா பகுதியில் பற்றிய காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதையடுத்து சுமார் 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், தீயானது கட்டுக்கடங்காமல் பரவுவதால் அதனை முழுமையாக அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. 300 தீயணைப்பு வீரர்கள் 10 ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

ஆனாலும் தீ முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. காட்டுத்தீயால் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4,650 ஹெக்டேர் அளவிற்கு தீயானது பரவி உள்ளது. அவசரகால சேவைகள் தங்கள் பணிகளை எளிதில் செய்து முடிக்க ஏதுவாக மீட்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வெளியேறும்படி லா பால்மா கவுன்சிலின் தலைவரும், தீவின் முக்கிய அதிகாரியுமான செர்ஜியோ ரோட்ரிக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ: 4,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு appeared first on Dinakaran.

Tags : Spain ,Madrid ,La Palma ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா