×

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் கண்டனம்

சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை மூலம் மிரட்டி அடிமைப்படுத்தலாம் என ஒன்றிய பாஜக அரசு நினைக்கிறது. ஒன்றிய அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன; என்றாவது அவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறதா? அமலாக்கத்துறை சோதனையால் மக்களிடையே எதிர்க்கட்சியினருக்கு செல்வாக்கு அதிகமாகும். பாஜகவின் ஒரு அரசியல் பிரிவாக அமலாக்கத்துறை செயல்படுவதாக மக்கள் கருதுகிறார்கள். பாஜகவுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை; நேருக்கு நேர் எதிர்கொள்ள பாஜகவுக்கு திராணி இல்லை எனவும் கூறினார்.

The post அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Minister ,Ponmudi ,Chennai ,Tamil Nadu Congress Committee ,K.K. S.S. Anekiri ,Department of Enforcement ,Bonmudi ,House Enforcement Department ,Dinakaran ,
× RELATED காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு...