×

திமுக மீது பாஜகவுக்கு கோபம், வெறுப்பு!: பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை…திமுக செய்தித் தொடர்பாளர் விளாசல்..!!

சென்னை: பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது திமுக செய்தித் தொடர்பாளர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி, பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. திமுக மீது பாஜகவுக்கு கோபம், வெறுப்பு இருக்கிறது என கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்திருக்கிறார். பாஜக எதிர்ப்பு நடவடிக்கையை திமுக குறைத்துக்கொள்ள அச்சுறுத்தும் நடவடிக்கையாக சோதனை நடைபெறுகிறது. 2 வழக்குகளில் பொன்முடி குற்றமற்றவர் என்று வெளியே வந்த நிலையில் சோதனை நடைபெறுகிறது.

எதிர்கட்சிகளை வேண்டுமென்றே பயமுறுத்துவதற்காகவே ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான கொள்கை ரீதியான யுத்தத்தை திமுக இன்னும் வீரியத்துடன் மேற்கொள்ளும் என்று கூறினார். மேலும், குஜராத்தில் 4 பாலங்கள் இடிந்துள்ளன, அங்கு உள்ள ஊழல்களை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தைரியம் இல்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வேகத்தை குறைப்பதற்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்துகிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கில் தற்போது சோதனை நடத்தி வருகிறது என்று திமுக செய்தித் தொடர்பாளர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

The post திமுக மீது பாஜகவுக்கு கோபம், வெறுப்பு!: பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை…திமுக செய்தித் தொடர்பாளர் விளாசல்..!! appeared first on Dinakaran.

Tags : Ponmudi ,Dizhagam ,Vlasal ,Chennai ,Chennai Saithapapatti ,Bajagu ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...