லண்டன் : ஆடவர் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், முதல்முறையாக விம்பிள்டன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் கார்லோஸ் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினார். இருவருக்கும் இடையே போட்டி மிக கடுமையாக இருந்தது. முதல் செட்டில் ஜோகோவிச் 6-1 என எளிதாக வெற்றி பெற தீவிரமாக விளையாடி 2ம் செட்டை கார்லோஸ் அல்காரஸ் தன் வசம் ஆக்கினார். தொடர்ந்து 3வது செட்டில் கார்லோஸ் அல்காரஸ் எளிதில் வெற்றி பெற்றார். 4வது செட்டில் 6-3 என்ற புள்ளி கணக்கில் ஜோகோவிச் வென்றார்.
இதனால் போட்டியில் அனல் பறந்தது. வெற்றியை தீர்மானிக்கும் 5வது செட்டில் கார்லோஸ் அல்காரஸ் 6- 4 என்ற கணக்கில் வென்று விம்பிள்டன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் விம்பிள்டன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றி கார்லோஸ் அல்காரஸ் அசத்தியுள்ளார். போட்டியானது சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது. பட்டம் வென்ற 20 வயது இளம் வீரர் கார்லோஸ் அல்காரஸுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.வேற்றின மூலம் மூலம் விம்பிள்டனில் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு அல்காரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்காரசுக்கு 24.50 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு 12.25 கோடி ரூபாய் கிடைத்தது.
The post விம்பிள்டன் பட்டத்தை வென்று அசத்திய 20 வயது கார்லோஸ் அல்காரஸ்…ஜோகோவிச் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி appeared first on Dinakaran.