×

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சம்பங்கி ரூ.150க்கு விற்பனை

 

திண்டுக்கல், ஜூலை 17: திண்டுக்கல் அண்ணா பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்காக திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து ஈரோடு, திருச்சி, சேலம், சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆடி மாதம் பிறப்பு மற்றும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.10க்கு விற்பனையான ஒரு கிலோ சம்பங்கி பூ நேற்று ரூ150க்கு விற்பனையானது. இதே போல் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.600க்கும், ரோஜாப்பூ ரூ.90க்கும், முல்லைப் பூ ரூ.250க்கும், ஜாதிபூ ரூ.300க்கும், கனகாம்பரம் ரூ.250க்கும், கோழிகொண்டை ரூ.60க்கும்., செண்டுமல்லி ரூ.80க்கும், விருட்சி பூ ரூ.100க்கும் காக்கரட்டான் ரூ.250க்கும், செவ்வந்தி ரூ.150 முதல் 180 வரையிலும், வாடாமல்லி ரூ.10க்கும், மரிக்கொழுந்து ரூ.90க்கும் அரளி பூ ரூ.200க்கும் தாமரைப்பூ ரூ.5க்கும் விற்பனையானது.

The post திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சம்பங்கி ரூ.150க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Sambangi ,Dindigul ,market ,Anna Flower Market ,Dindigul Flower Market ,Dinakaran ,
× RELATED அய்யலூர் ஆட்டுச்சந்தையில் அனைத்து...