×

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் தினமும் வீணாகும் தண்ணீர் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

 

முத்துப்பேட்டை, ஜூலை 17: கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் தினமும் தண்ணீர் வீணாகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் இணைப்புகளுக்கு கொள்ளிடத்தில் இருந்து மன்னார்குடி, கோட்டூர், திருப்பத்தூர், மாங்குடி, கடுவெளி, சங்கேந்தி வழியாக எடையூர் சம்புக்கு வந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் மெயின் பைப் லைன் வழியாக முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி குடிநீர் டேங்குகளை சென்றடைகிறது. பின்னர் அருகில் இருக்கும் ஊராட்சி கிராமப் பகுதிகளுக்கு பைப் லைன் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இதேபோல எடையூர் சம்பிலிருந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு சென்றடைகிறது. தினசரி பம்பிங் செய்யப்படும் குடிநீர் அந்தந்த பகுதிக்கு செல்லும்போது, குடிநீரில் பாதி அளவு குறைந்து விடுகிறது. இந்த நீர்வரத்து குறைவால் மக்களுக்கு வழங்கும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. எடையூர் கிழக்கு கடற்க்கரை சாலையில் உள்ள அங்காடி எதிரே பாசன வாய்க்காலை கடந்து செல்லும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பிரதான ராட்சத குழாயில் உள்ள வால்வுடன் இணைத்து இருக்கும் சிறிய பைப்பிலிருந்து ஓராண்டிற்கு மேலாக 24 மணி நேரமும் குடிநீர் வெளியேறி வாய்க்காலில் வீண் விரையமாக செல்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் பார்வையிட்டு குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் தினமும் வீணாகும் தண்ணீர் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kollidam ,Muthuppet ,Kollidum ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பரப்பளவு குறைந்தது