×

‘சமரசம் செய்ய விரும்பு’முத்தரப்பு கருத்தரங்கில் நீதிபதிகள் பங்கேற்பு

 

ஈரோடு, ஜூலை 17: ஈரோட்டில் சமரசம் செய்ய விரும்பு என்ற தலைப்பில் நடந்த முத்தரப்பு கருத்தரங்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்று பேசினர். ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சமரசம் மற்றும் இனக்க முறை மையமும், ஈரோடு மாவட்ட சமரச மையமும் இணைந்து ‘சமரசம் செய்ய விரும்பு’ என்ற தலைப்பிலான முத்தரப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஈரோடு மகிளா நீதிமன்ற நீதிபதி மாலதி வரவேற்றார். ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட அன்பின் ஆலயம் என்ற சமரச விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், புகழேந்தி ஆகியோர் வெளியிட்டு பேசினர்.

ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் மாவட்டத்தில் செயல்படும் சமரச மையத்தின் சிறப்பு செயல்பாடுகள் குறித்தும், சமரச மையத்தின் மூலமாக தீர்வு காணப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட அனைத்து வழக்கறிஞர்களின் சங்களின் சார்பாக வாழ்த்தி பேசினர். மேலும் தமிழ்நாடு சமரசம் மற்றும் இனக்கமுறை மையத்தின் மூத்த பயிற்சியாளர் வழக்கறிஞர் ஜாவத், சமரச மையம் மூலமாக தீர்வு காண்பது குறித்து பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சமரசர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஈரோடு மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) நீதிபதி ராமச்சந்திரன் நன்றி கூறினார். முன்னதாக, ஈரோடு நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச வழிப்புணர்வு மையத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், புகழேந்தி ஆகியோர் திறந்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ‘சமரசம் செய்ய விரும்பு’முத்தரப்பு கருத்தரங்கில் நீதிபதிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Madras ,High Court ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...