×

அரிமளம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

 

திருமயம். ஜூலை 17: அரிமளம் சிவன் கோயிலில் நடைபெற்ற மகா சனி பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு பிரதோஷ நிகழ்ச்சியிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மகா சனி பிரதோஷ விழா நடைபெற்றது. இதற்காக மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, பழங்கள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிவ பெருமான், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் வளாகத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

The post அரிமளம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Arimalam Shiva Temple ,Maha Shani Pradosha ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா