×

அருள்புரத்தில் மதிமுக கையெழுத்து இயக்கம்

 

பல்லடம், ஜூலை 17: பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் மதிமுக சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட பொருளாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஆர்.ரவி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் புத்தரச்சல் பி.கே.மணி, மாவட்ட துணை செயலாளர் காவீ.பழனிசாமி, மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கையெழுத்து இயக்கத்தை பல்லடம் திமுக ஒன்றிய செயலாளர்கள் என்.சோமசுந்தரம்,( கிழக்கு), எஸ்.கிருஷ்ணமூர்த்தி (மேற்கு) ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அரிமா நாகராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் கரைப்புதூர் ராஜேந்திரன், வட்டார காங்கிரஸ் தலைவர் கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் ஓ.ரங்கசாமி, மதிமுக நிர்வாகிகள் பல்லடம் நகர செயலாளர் வைகோ பாலு, ஒன்றிய செயலாளர்கள் பொங்கலூர் முத்துசாமி, அப்புசாமி, காங்கேயம் ஒன்றிய செயலாளர் மணி, பொதுக்குழு உறுப்பினர் சோனை முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அருள்புரத்தில் மதிமுக கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Arulpuram ,Palladam ,MDMK ,Tamil ,Nadu ,Governor ,RN Ravi ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...