×

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி

 

உடுமலை, ஜூலை 17: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணை வாயிலாக திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள 3,77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. அணையில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததால் மண் தேங்கி நீர் தேங்கும் பரப்பளவு பெருமளவு குறைந்துள்ளது. இதனால் பாசனத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

அணையை தூர்வாரி கூடுதல் நீர் சேமிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாய விளைநிலங்களை வளமாக்கும் வகையிலும் நீர்நிலைகளை தூர் வாரும் வகையிலும் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்து வருகிறது. திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண் எடுத்துக்கொள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் வேளாண் துறை வாயிலாக வருவாய்த்துறை கனிமவளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பித்திருந்தனர். நீண்ட இழுபறிக்குபின் தற்போது வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

The post உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Thirumurthy Dam ,Udumalai ,
× RELATED பெரியகுளம் செக்டேம் அருகே தரைப்பகுதி சேதமடையும் அபாயம்