×

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

 

திருச்சுழி, ஜூலை 17:திருச்சுழி அருகே உள்ள மேலபாறைக்குளத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி முத்தம்மாள் (65). இவரது மகன் முத்துக்குமார். முத்தம்மாள் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வந்த முத்துக்குமார் சொத்துக்களை தனக்கு எழுதி தரக்கூறி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த முத்தம்மாள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பரளச்சி போலீசார் முத்துக்குமார் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post தாயை தாக்கிய மகன் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,Muthuchami ,Muthammal ,Melaparaikulam ,Muthukumar ,
× RELATED திருச்சுழியில் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி