- ஆதி அமாவாசை ராமேஸ்வரம் கோயில்
- ராமேஸ்வரம்
- ராமேஸ்வர ராமநாதசுவாமி கோவில்
- ஆதித்திரு திருவிழா
- பர்வதவர்தினி அம்பல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப் பல்லக்கில் நான்கு ரதவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை நான்கு மணிக்கு கோயில் நடை திறந்து ஸ்படிலிங்க பூஜையும், கால பூஜைகளும் நடைபெறும். தொடர்ந்து பகல் 10 மணிக்கு மேல் அக்னி தீர்த்தம் கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. ஆடி அமாவாசையையொட்டி இன்று பகல் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும் என்பதால், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
The post ஆடி அமாவாசை ராமேஸ்வரம் கோயில் பகல் முழுவதும் இன்று திறப்பு appeared first on Dinakaran.