×

மாநில அளவிலான சிலம்ப போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

சென்னை: தமிழ்நாடு சிலம்ப கழகம் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு போட்டியை துவக்கி வைத்தார். இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

இதில் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, வேல் கம்பு, வால் வீச்சு, சுருள்வாள் வீச்சு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. 5 முதல் 18 வயது வரையிலுள்ள போட்டியாளர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சிறப்பாக சிலம்பம் சுற்றிய வீரர், வீராங்கனைகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் முதல், 2வது மற்றும் 3வது பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சிலம்பம் சிலை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ பரிசு, ஊக்கத் தொகை வழங்கினார்.

The post மாநில அளவிலான சிலம்ப போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chilumba Match ,Tamil Nadu Chilumba Club Sports Association ,Thiruvotteur Panthotta School Ground ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு