×

ஆலப்புழா அருகே மருத்துவமனையில் இளம்பெண் சரமாரி குத்திக்கொலை: தொடர்பை துண்டித்ததால் மாஜி காதலன் ஆவேசம்

திருவனந்தபுரம்: தன்னுடன் தொடர்பை துண்டித்ததால் ஆத்திரமடைந்த மாஜி காதலன், இளம்பெண்ணை மருத்துவமனையில் வைத்து சரமாரியாக குத்திக்கொலை செய்தார். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே துறவூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி லிஜி (42). ராஜேஷ் கத்தார் நாட்டில் பணி புரிந்து வருகிறார். இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், லிஜியின் முன்னாள் காதலன் மூலம் குடும்பத்தில் பிரச்னை வெடித்தது. திருமணத்திற்கு முன்பு லிஜியும், வெல்டிங் தொழிலாளியான மகேஷ் (44) என்பவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் இவர்களது காதலுக்கு லிஜியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி ராஜேசை, லிஜி திருமணம் செய்தார். லிஜி திருமண வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு காதலன் மகேஷை மறந்து விட்டார். ஆனால் மகேஷ் தன்னுடைய காதலி லிஜியுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மகேஷுடன் லிஜி பேசுவதில்லை. இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் லிஜியின் தாய் லில்லி எர்ணாகுளம் அருகே அங்கமாலியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருடன் லிஜியும் தங்கியிருந்தார். இது குறித்து அறிந்த மகேஷ் நேற்று முன்தினம் அந்த மருத்துவமனைக்கு சென்று லிஜியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென தான் கொண்டு வந்த கத்தியால் லிஜியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் லிஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அங்கமாலி போலீசார் விரைந்து சென்று மகேஷை கைது செய்தனர்.

The post ஆலப்புழா அருகே மருத்துவமனையில் இளம்பெண் சரமாரி குத்திக்கொலை: தொடர்பை துண்டித்ததால் மாஜி காதலன் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Chamari ,Alappuzha ,Maji ,Thiruvananthapuram ,Kerala State ,
× RELATED சென்னை – ஆலப்புழா ரயிலில்...