×

இந்தியா -மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடக்கம்: பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: இந்தியா மங்கோலியா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வௌியிடப்பட்ட அறிக்கையில், “நோமேடிக் எலிபேன்ட் 23 என்று பெயரிடப்பட்டுள்ள கூட்டு ராணுவப் பயிற்சி மங்கோலிய தலைநகர் உலான்பாதரில் நடைபெறும். 15வது கூட்டு ராணுவப் பயிற்சியில் கலந்து கொள்ள 43 வீரர்கள் அடங்கிய இந்திய ராணுவக் குழுவினர் சி-17 விமானத்தில் மங்கோலியா சென்றுள்ளனர்.

இருநாட்டு ராணுவத்துக்கிடையே உறவுகளை கட்டமைப்பது, சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வது, நட்புறவை மேம்படுத்துவது ஆகியவை இந்த பயிற்சியின் நோக்கம். ஐக்கியநாடுகள் சபையின் உத்தரவுப்படி மலைப்பகுதிகளில் தீவிரவாத எதிர் தாக்குதல்களில் கவனம் செலுத்துவது இப்பயிற்சியின் கருப் பொருள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியா -மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடக்கம்: பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Mongolia ,Defense Ministry ,New Delhi ,Ministry of Defense ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...