×

வல்வில் ஓரி விழாவிற்கு தயாராகும் கொல்லிமலை: தூய்மைப் பணிகள் தீவிரம்

சேந்தமங்கலம்: கொல்லிமலையில், அடுத்த மாதம் நடக்கும் வல்வில் ஓரி விழாவையொட்டி சாலைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், சிறந்த சுற்றுலா தளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் வல்வில் ஓரி விழா நடத்தப்பட்டு வருகிறது. அரசு சார்பில் நடைபெறும் இந்த விழாவில், மலர் கண்காட்சி, பல்துறை சார்ந்த கண்காட்சி அரங்கம், வில்வித்தை போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அடுத்த மாதம் 3ம் தேதி, வல்வில் ஓரிவிழா நடைபெறுகிறது. இதற்காக சேந்தமங்கலம் நெடுஞ்சாலை துறையின் சார்பில், 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கொல்லிமலை மலைப்பாதையை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், பொறியாளர் பிரனேஷ் ஆகியோர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தடுப்பு சுவர்களுக்கு வெள்ளை அடிப்பது, சாலை ஓரத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post வல்வில் ஓரி விழாவிற்கு தயாராகும் கொல்லிமலை: தூய்மைப் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Valvil Ori Festival ,Sendamangalam ,Kollimalaya ,Kolimalai ,Val Ori Festival ,
× RELATED தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்ல தடை