×

பொது சிவில் சட்டம் குறித்து காங். கட்சியின் நிலைபாடு என்ன?: மூத்த தலைவர்கள் ஆலோசனை

புதுடெல்லி: பொது சிவில் சட்டம் குறித்த காங்கிரசின் நிலைபாடு குறித்து ஆய்வு செய்வதற்காக மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த சட்டம் குறித்த வரைவு மசோதா விபரங்களை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. அதனால் வரைவு மசோதாவில் கூறப்படும் விசயங்கள் மற்றும் பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பது குறித்து முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் இதுவரை கருத்து ெதரிவிக்கவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், அபிஷேக் சிங்வி, விவேக் தங்கா, மணீஷ் திவாரி, கேடிஎஸ் துளசி ஆகியோர் அடங்கிய குழுவினர், பொது சிவில் சட்டம் மற்றும் அதன் அம்சங்கள் குறித்து ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்து விவாதித்தனர். இந்த விஷயத்தில் நுணுக்கமான நிலைப்பாட்டை எடுக்கவும், வரைவு மசோதாவை ஆய்வு செய்த பின்னரே கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையை கட்சித் தலைமைக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பொது சிவில் சட்டம் குறித்து காங். கட்சியின் நிலைபாடு என்ன?: மூத்த தலைவர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Congress ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...