×

அம்மா செங்கமலம்! வெயிட்டை குறைக்கணும்! பாப்கட்டிங் புகழ் செங்கமலம் யானை உடல் எடை அதிகரிப்பு: மருத்துவர்கள் அறிவுரை

மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானையின் உடலை எடையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலின் பாப்கட்டிங் புகழ் செங்கமலம் (33) யானையின் உடல்நலம் குறித்து மாவட்ட வன அலுவலர் காந்த், மாவட்ட வளர்ப்பு யானை கள் மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர் டாக்டர் சிவகணேசன், கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் மும்மூர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதில் யானை ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை உட்கொள்ளும் இரையின் அளவு, பாகன் சொல்வதை புரிந்து கொள்ளும் திறன்,கண், காது, வால், கால் போன்றவற்றின் நிலை, ஆரோக்கியம், யானை தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் பரப்பளவு போன்றவை குறித்து ஆய்வு செய்தனர்.ஆய்வு குறித்து டாக்டர் சிவகணேசன் கூறியது: யானையின் அனைத்து பதிவேடுகளும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைக்கான புதிய நீச்சல் குளம் பயனுள்ளதாக உள்ளது.யானையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது. யானையின் எடை அளவை குறைத்தல் அவசியம். கால்நடை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று வசந்த தாவரங்கள் மற்றும் திட உணவுகளை யானையின் வயதுக்கு ஏற்ப வழங்குதல் அவசியம் என்றார்.

The post அம்மா செங்கமலம்! வெயிட்டை குறைக்கணும்! பாப்கட்டிங் புகழ் செங்கமலம் யானை உடல் எடை அதிகரிப்பு: மருத்துவர்கள் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chenchamalam ,Mannargudi ,Mannargudi Rajagopala Swami Temple ,
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...