×

ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரக்கட்டை கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 25 பேர் கைது

அமராவதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரக்கட்டை கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 25 பேர் கைது செய்யபட்டுள்ளனர். ஆந்திர மாநில வனபகுதிகல் செம்மரகட்டைகளை வெட்டி அண்டைநாடுகளுக்கு கடத்துவது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்க ஆந்திர மாநில போலிசார் செம்மரகடத்தல் தடுப்பு பிரிவை உருவாக்கி வன பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

அப்போது வனபகுதிகளில் 20-க்கும் மேற்பட்டோர் செம்மரகட்டைகளை வெட்டி கடத்திவருவதை பார்த்து அவர்களை விரட்டி பிரித்தனர். பிஞ்ச தும்மல பைலுவில் 5 பேரும் பீலேர் வனபகுதியில் 20 பேரும் கைது செய்யபட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தபட்ட முதற்கட்ட விசாரணையில் கைது செய்யபட்ட 25 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யபட்டவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 19 செம்மரகட்டைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளபட்டுவருகிறது.

The post ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரக்கட்டை கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 25 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : tamil nadu ,AP state ,Thiruppati ,AMARAWATI ,AP ,Thirupati ,Andhra ,Andhra Pradeegal ,Tirupati ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...