×

வாணியம்பாடியில் நிலத்தில் கழிவுநீர் தேக்கிய தோல் தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கை

ஆம்பூர்: வாணியம்பாடியில் தோல் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நிலத்தில் தேக்கி வைத்த தனியார் தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு நேற்று துண்டிக்கப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, உதயேந்திரம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நீர் பின்னர் சுத்திகரிப்பு செய்ய பொது சுத்திகரிப்பு மையத்திற்கு அனுப்பப்படுகின்றன. ஆனால், ஒரு சில தோல் பதனிடும் நிறுவனங்கள் இந்த கழிவுநீரை சுத்திகரிக்காமல் முறைகேடாக கழிவுநீர் கால்வாய், நீர் நிலைகளான ஆறுகளில் விடுவதாக பல்வேறு புகார்கள் உள்ளன. இதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட மாசுகட்டுபாட்டு அலுவலரான கோபாலகிருஷ்ணன் நேற்று டிரங்க் ரோட்டில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது அந்த தொழிற்சாலையில் உள்ள ஒரு இடத்தில் தோல் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் தேக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாசு கட்டுபாட்டு வாரியத்தினர் அந்த தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்தனர். மேலும், இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கழிவுநீரை முறைகேடாக தேக்கிய புகாரில், நேற்று வரை 5 தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வாணியம்பாடியில் நிலத்தில் கழிவுநீர் தேக்கிய தோல் தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Ampur ,Vaneyambadi ,Land ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...