×

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050 எம்.பி.எஸ் இடங்களும், 200 பிடிஎஸ் படிப்பு இடங்களும், 150 இஎஸ்ஐ இடங்களும் உள்ளன.

அரசு ஒதுக்கீடு தரவரிசை பட்டியல், 7.5% உள் ஒதுக்கீடு என 3 வகையான தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடபட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில், 720 மதிபெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த விழுப்புரம் மாணவன் பிரபஞ்சன் முதலிடம் பெற்றுள்ளார். சென்னையை சேர்ந்த சூர்யா சித்தார்த் 715 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பெற்றுள்ளார். சேலத்தைத் சேர்ந்த வருண் 715 மதிப்பெண் பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டு தரவரிசையில், சேலத்தை சேர்ந்த கிருத்திகா 569 மதிபெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தருமபுரியைச் சேர்ந்த பச்சையப்பன் 565 மதிபெண்கள் பெற்று 2வது இடம், காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் 560 மதிபெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவ படிப்பில் சேர 2662 மாணவர்கள் விண்ணபித்திருந்தனர்.

The post இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mah ,Suframanian ,Chennai ,Ma'am ,Tamil Nadu ,Ma. Superamanian ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...