×

காமராஜர் பிறந்த நாள்

ராஜபாளையம், ஜூலை 16: ராஜபாளையத்தில் காமராஜர் 121வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத் தாரகர்கள் நலச்சங்கம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் திரு உருவ சிலைக்கு ராஜபாளையம் தொகுதி தலைவர் லட்சுமணன் தலைமையில் நகர செயலாளர் ராஜு மற்றும் பொருளாளர் ஆறுமுகம் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர். ஐயப்பன், மாவட்ட தலைவர். ராஜ்குமார், மாவட்ட துணைத்தலைவர் நகர் மன்ற உறுப்பினர் ஜான் கென்னடி, மாவட்ட பொருளாளர் முப்பிடாதி, செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், ராமநாதன், சக்திவேல் ராஜா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post காமராஜர் பிறந்த நாள் appeared first on Dinakaran.

Tags : Kamaraj ,Rajapalayam ,Rajapalayam Builders Land Developers ,Brokers ,
× RELATED வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள்...