×

ஆதார் திருத்தம் சிறப்பு முகாம்

அருப்புக்கோட்டை, ஜூலை 16: அருப்புக்கோட்டை தேவாங்கர் துவக்க பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப்கோல்டன் மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து ஆதார் திருத்தம் சிறப்பு முகாம் நடத்தியது. இந்தசிறப்பு முகாமினை நகராட்சி 31வது வார்டு திமுநகர்மன்ற உறுப்பினர் ஜெயகவிதா முத்துவேல் துவக்கி வைத்தார். முகாமில் ஆதார் கார்டுகளில் பெயர் மாற்றம் முகவரி மாற்றம் புதியதாக சேர்த்தல் திருத்தம் செய்தல் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயோ மெட்ரிக் மாற்றம் ஆகியவை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

The post ஆதார் திருத்தம் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Aadhaar Correction Special Camp ,Arupukotta ,Rotary Club Abgolden ,Indian Post Department ,Arapukotta Dewangar Elementary School ,Dinakaran ,
× RELATED தாளாளர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த...